மூன்றாம் கண்.,: ரூ. 32,000-க்கு "நானோ' வீடுகள்: டாடா குழுமம் திட்டம்

Pages

Friday, July 15, 2011

ரூ. 32,000-க்கு "நானோ' வீடுகள்: டாடா குழுமம் திட்டம்


நானோ கார் வெற்றியைத் தொடர்ந்து குறைந்த விலையில் வீடுகளை கட்டி விற்பனை செய்ய டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
ரூ. 32 ஆயிரம் விலையில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்ய உள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவன ஆய்வுப் பிரிவு தலைவர் சுமிதேஷ் தாஸ் தெரிவித்தார். நாடு முழுவதும் 30 இடங்களில் இதுபோன்ற குறைந்த விலை வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தேங்காய் நார் வாரியம், சணல் வாரியம் உள்ளிட்ட மாநில அரசு சார்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய வீடுகள் இரும்பினால் ஆனவை. இதை எளிதில் கழற்றி மாட்ட இயலும். இந்த வீடுகளில் மேற்கூரை, கதவு, ஜன்னல் ஆகியவற்றை அமைத்தால் போதுமானது. இத்தகைய வீடுகளை 7 நாள்களில் கட்ட முடியும். 20 சதுர மீட்டர் பரப்பளவிலான வீட்டை ரூ. 32 ஆயிரத்திலும், 30 சதுர மீட்டர் பரப்பளவிலான வீட்டை ரூ. 45 ஆயிரத்திலும் கட்ட முடியும். இவை தவிர, மேற்கூரையில் சூரிய பலகை கொண்ட வீடுகளும் கட்ட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். 2001-ம் ஆண்டு கணக்கீட்டின்படி நகர்ப்பகுதியில் 1.48 கோடி வீடுகளுக்கு தேவை ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இத்தகைய சூழலில் இதுபோன்ற குறைந்த விலை வீடுகளுக்கு அதிக தேவை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...