மூன்றாம் கண்.,: சென்னை வருகிறார் ஹிலாரி கிளிண்டன்! .

Pages

Saturday, July 9, 2011

சென்னை வருகிறார் ஹிலாரி கிளிண்டன்! .அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் எதிர்வரும் 19-20 ம் திகதிகளில் சென்னைக்கு வரவுள்ளார். இத்தகவலை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. தீவிரவாத பிரச்சினை,
அமெரிக்க - இந்திய இராணுவ பாதுகாப்பு  மற்றும் வர்த்தக, விஞ்ஞான மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்தியா வரும் அவர் டெல்லியில், முக்கிய அமைச்சர்களுடனான சந்திப்பை நிகழ்த்துகின்றார். அதன் பின்னர், அவர் சென்னைக்கு வரவுள்ளார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஒருவர் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இவ்விஜயத்தின் போது சென்னையில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என்பவற்றை பார்வையிடவுள்ளதுடன், போக்குவரத்து வாகன உற்பத்தி தொடர்பிலும் அவதானிப்புக்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க வெளியுறவு செயலராக பதவி ஏற்றதன் பின்னர் இரண்டாவது தடவையாக இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார். முன்னதாக ஜூலை 17 மற்றும் 18ம் திகதிகளில் கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கிருந்தே இந்தியா வருகிறார்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...