மூன்றாம் கண்.,: கவுண்டமணியின் தாயாருடன் விஜய்

Pages

Tuesday, July 5, 2011

கவுண்டமணியின் தாயாருடன் விஜய்ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் "ஜெயம்' ராஜா இயக்கும் படம் "வேலாயுதம்'. விஜய், ஹன்சிகா, சரண்யா மோகன் நடிக்கின்றனர்.
ஊரில் ஒருவராக இருக்கும் விஜய், ஊருக்கே ஒருவராக எப்படி உயர்கிறார் என்பதுதான் படத்தின் கதைக் கரு. இப்படத்துக்கான ஒரு திருமண காட்சியை கவுண்டமணியின் சொந்த ஊரில் படமாக்கியுள்ளனர். பொள்ளாச்சியில் இருந்து திருமூர்த்தி மலை செல்லும் வழியில் உள்ள, வல்லகுண்டாபுரம்தான் கவுண்டமணியின் சொந்த ஊர். விஜய்யின் தங்கையாக நடிக்கும் சரண்யா மோகனின் திருமணக் காட்சிகள் அந்த ஊரில் படமாக்கப்பட்டன. கவுண்டமணி பிறந்து, வளர்ந்த வீட்டிலும் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். அப்போது கவுண்டமணியின் தாயார் காளியம்மாளைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் விஜய். இதுவரை கவுண்டமணியின் குடும்பப் படமோ, குடும்ப உறுப்பினர்களின் படமோ எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமானதில்லை. பத்திரிகையாளர்களிடம் பேசுவதையே தவிர்த்து வருபவர் கவுண்டமணி என்பது குறிப்பிடத்தக்கது.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...