மூன்றாம் கண்.,: கடைசி அமைச்சரவை மாற்றம்: மன்மோகன் சிங்

Pages

Tuesday, July 12, 2011

கடைசி அமைச்சரவை மாற்றம்: மன்மோகன் சிங்மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில்,2014 வரையிலான பதவி காலத்தில் இதுவே கடைசி அமைச்சரவை மாற்றம் என்று
பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இன்றைய அமைச்சரவை மாற்றம்தான், 2014 ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முந்தைய கடைசி அமைச்சரவை மாற்றம் இது என்றும், அதே சமயம் கூட்டணி தர்மத்திற்காக திமுகவுக்காக இரண்டு காலியிடங்கள் விட்டுவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இன்றைய அமைச்சரவை மாற்றம் பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான சமநிலை தேவை, திறமை மற்றும் நீடிப்புத்தன்மை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என்று கூறிய பிரதமர், தம்மை பொறுத்தவரை தேர்தலை(2014) சந்திக்கப்போகும் முன்னர் செய்யும் கடைசி அமைச்சரவை மாற்றம் இது என்றார். அமைச்சரவை மாற்றத்தினால் சில அமைச்சர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுவதால், அதனால் ஏதேனும் சிக்கல் ஏற்படும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று கேட்டபோது, நாட்டின் நலன்களை கருத்தில்கொண்டே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்தார் மன்மோகன் சிங்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...