மூன்றாம் கண்.,: பாகிஸ்தானுக்கு நிதி உதவியை குறைத்தது அமெரிக்கா!

Pages

Monday, July 11, 2011

பாகிஸ்தானுக்கு நிதி உதவியை குறைத்தது அமெரிக்கா!



தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுப்பதற்காக பல பில்லியன் டாலர் அளவுக்கு ராணுவ உதவிகளை செய்து வந்தது அமெரிக்கா. எல்லா உதவிகளையும் அனுபவித்த பாகிஸ்தான்,
தீவிரவாதிகளை ஒழிப்பதில் முழுமையாக ஈடுபடவில்லை. பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி கொண்டு, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்த பின்லேடனை கூட அமெரிக்க படை கண்டுபிடித்து சுட்டுக் கொன்றது. இச்சம்பவத்துக்கு பின் அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க படை அத்துமீறி நடத்தும் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு இந்தாண்டு 2 பில்லியன் டாலர் (ரூ.9 ஆயிரம் கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை செய்ய அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. இதில் தற்போது 800 மில்லியன் டாலர் (ரூ.3ஆயிரத்து 600 கோடி) மதிப்பிலான உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துவிட்டது. இத்தகவலை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி வில்லியம் டேலே தெரிவித்தார். இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ' தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறாவிட்டால், இலவச உணவை (நிதியுதவியை) பாகிஸ்தான் எதிர்பார்க்க முடியாது ' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.





Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...