மூன்றாம் கண்.,: ரூ. 20 கோடி வருவாய் ஈட்டிய தாஜ்மகால்

Pages

Friday, July 29, 2011

ரூ. 20 கோடி வருவாய் ஈட்டிய தாஜ்மகால்

ஆக்ராவில் அமைந்துள்ள, காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகால், கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆக்ராவில் அமைந்துள்ள காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகால், மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
தாஜ்மகாலைப் பார்க்க தினந்தோறும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், நுழைவுச் சீட்டு விற்பனை மூலம், தாஜ்மகால் கடந்த ஆண்டில், ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு மூலம், ரூ. 14.36 கோடியும், 2009-10ம் ஆண்டில், ரூ. 17.24 கோடியும், 2010-11ம் ஆண்டில் ரூ.19.89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும் 116 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ. 87 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், டில்லியில் உள்ள குதூப் மினார் மூலம், ரூ. 10 கோடியும், ஹூமாயூன் கல்லறை மூலம் ரூ. 6.15 கோடியும், செங்கோட்டை மூலம் ரூ. 5.90 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.





Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...