மூன்றாம் கண்.,: மும்பை குண்டுவெடிப்பு பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போர் எல்.கே.அத்வானி

Pages

Thursday, July 14, 2011

மும்பை குண்டுவெடிப்பு பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போர் எல்.கே.அத்வானி



மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போர் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குற்றம்சாட்டினார். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மும்பையில் மூன்று இடங்களில் புதன்கிழமை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை எல்.கே.அத்வானி வியாழக்கிழமை பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தனது மென்மையான போக்கை கைவிட வேண்டும். புதன்கிழமை மும்பையில் நடந்த சம்பவத்துக்குப் பிறகாவது, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் இல்லை என்ற நிலையை இந்தியா எடுக்க வேண்டும். பயங்கரவாத்தின் வேர்களை களையாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்த பயனும் இல்லை. இப்போது மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு என்பது, புலனாய்வுப்பிரிவில் ஏற்பட்ட தோல்வி அல்ல; நமது கொள்கையில் ஏற்பட்ட தோல்விதான் என்றார். தாக்குதல் உள்நாட்டில் இருந்து நடத்தப்பட்டாலும், வெளிநாட்டில் இருந்து நடத்தப்பட்டாலும் மும்பைதான் பயங்கரவாதிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக உள்ளது. இப்போது நிகழ்ந்துள்ள சம்பவத்துக்கு இந்தியாவில் இருந்து செயல்படும் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பினரே காரணம் என சிலர் கூறுகின்றனர். இந்தியாவில் இருந்து செயல்பட்டாலும், அவர்களை செயல்பட வைப்பது பாகிஸ்தான்தான் என்று அவர் குற்றம்சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், காஷ்மீரில் நடைபெற்று வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் பாகிஸ்தானே காரணம். ஆனால் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதால் தான் அங்கு இதுபோன்று நடப்பதாக பாகிஸ்தானே உலக நாடுகளிடம் கூறி வருகிறது. அண்டை நாடுகளுக்காக நமது வரலாற்றையும், புவியியல் அமைப்பையும் மாற்ற முடியாது.கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்கா அதிக அக்கறை காட்டுவதற்கு, அமெரிக்கர்கள் சிலரும் இறந்திருப்பது தான் காரணம். உலகிலேயே அமெரிக்காதான் தங்களது முதல் எதிரி என ஜிகாத் அமைப்புகள் கூறி வந்தாலும், 2001-ல் அங்கு இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு வேறு எந்தவொரு அசம்பாவிதங்களும் அமெரிக்காவில் நடக்கவில்லை என்றார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...