மூன்றாம் கண்.,: ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்- கல்லூரி பேராசிரியர் கைது

Pages

Friday, July 15, 2011

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்- கல்லூரி பேராசிரியர் கைதுமுதலமைச்சர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து கொல்வோம் என்று செ‌ல்போ‌‌னி‌ல் தகவல் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
சென்னை காவ‌ல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கட‌ந்த 11ஆ‌ம் தே‌தி செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வ‌ந்த தகவ‌லி‌ல், 'செப்டம்பர் 15ஆ‌ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று கோட்டைக்கு வரும்போது முதலமைச்சர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து கொல்வோம்' என்று அந்த கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இது கு‌றி‌த்து உடடினயாக ‌விசா‌ரி‌க்க காவ‌‌ல்துறை ஆணை‌ய‌ர் திரிபாதி உத்தரவிட்டதையடு‌த்து மத்திய குற்றப்பிரிவு காவ‌‌ல்துறை‌‌யின‌ர் நட‌த்‌திய விசாரணையில், குறிப்பிட்ட செல்போன் சிம் கார்டு கல்லூரி முதல்வர் ஒருவரது பெயரில் இருந்தது. உடனே தனிப்படை காவ‌ல்துறை‌யின‌ர் குறிப்பிட்ட கல்லூரி முதல்வரிடம் விசாரித்தார்கள்.
விசாரணையில் அவர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தது. அவரது பெயரில் செல்போன் சிம் கார்டை வாங்கி, சம்பந்தப்பட்ட குற்றவாளி எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பியிருப்பது கண்டறியப்பட்டது.இதையடு‌த்து 3 நாட்‌க‌ள் ‌விசாரணை‌க்கு ‌பிறகு உண்மையான குற்றவாளி கல்லூரி பேராசிரியர் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் யோகேஸ்வரன் (36) என்றும் அச்சரப்பாக்கம் மேற்குமாட வீதியில் வசித்து வந்தவ‌ர் எ‌ன்று‌ம் தெ‌ரியவ‌ந்தது. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழு‌ம் யோகே‌ஸ்வரனை காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்று கைது செ‌ய்தன‌ர். விசாரணையில் அவர் தற்போது வேலையில் இல்லை என்று தெரியவந்தது .குறிப்பிட்ட கல்லூரி முதல்வர், அவரது வேலை பறிபோவதற்கு காரணமாக இருந்தார் என்றும், இதனால் அவரை காவ‌ல்து‌றை‌யிட‌ம் மாட்டிவிடுவதற்காக அவரது பெயரில் செல்போன் சிம்கார்டு வாங்கி, அந்த செல்போனில் இருந்து மிரட்டல் தகவலை அனுப்பினேன் என்றும் கைதான யோகேஸ்வரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.யோகே‌ஸ்வர‌ன் ‌மீது கொலை மிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழ‌க்கு ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌‌ல் அடை‌த்தன‌ர்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...