மூன்றாம் கண்.,: இறங்கும்போது டயர் வெடிப்பு: ஏர் இந்தியா விமானம் தப்பியது

Pages

Wednesday, July 20, 2011

இறங்கும்போது டயர் வெடிப்பு: ஏர் இந்தியா விமானம் தப்பியதுடயர் வெடித்ததால் ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி நீண்டதூரம் ஓடியது. இந்திய விமானப்படையின் பராமரிப்பில் இருக்கும் கான்பூர் விமான நிலையத்தில் புதன்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது.

டயர் வெடித்த போது, இந்த விமானத்தில் 54 பயணிகள் இருந்தனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. இந்த விமானத்தில் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் பயணம் செய்தார். "விமானம் ஓடுபாதையில் இருந்து இறங்கிச் சகதிக்குள் சென்றது. இப்போது எல்லோரையும் விமானத்தில் இருந்து வெளியேற்றும் பணி நடக்கிறது' என இந்தச் சம்பவம் குறித்து டுவிட்டர் இணையதளத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். தில்லியிலிருந்து கொல்கத்தாவுக்கு கான்பூர் வழியாக இந்த விமானம் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளை வெளியேற்றியபிறகு, நிறுத்துமிடத்துக்கு விமானம் கொண்டுவரப்பட்டது. விமானப்படை பராமரித்துவரும் இந்த ஓடுபாதை மிகவும் குறுகியதாக இருந்ததாலேயே விமானம் மண்ணில் இறங்க நேர்ந்தது என்று கூறப்படுகிறது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...