மூன்றாம் கண்.,: வெளிநாட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியை ஆடும் சச்சின்

Pages

Friday, July 29, 2011

வெளிநாட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியை ஆடும் சச்சின்


லார்ட்ஸில் சதமடிப்பார். அது முடியவில்லையா, பரவாயில்லை டிரன்ட்பிரிட்ஜில் கண்டிப்பாக சத்தாய்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் சத்தம் போடாமல் சதம் போட்டுள்ளார் சச்சின். ஆமாம், டிரன்ட்பிரிட்ஜில் இன்று சச்சின் ஆடும் டெஸ்ட் போட்டி, வெளிநாடுகளில் அவர் பங்கேற்கும் 100வது போட்டியாகும்.

1989ம் ஆண்டு (ஹாவ்...) முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார் சச்சின். இதுவரை 177 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் - சமீபத்தில் முடிவடைந்த லார்ட்ஸ் போட்டியையும் சேர்த்து. இன்று டிரன்ட் பிரிட்ஜில் தனது 100வது டெஸ்ட் போட்டியை அவர் சந்திக்கிறார். அந்த வகையில் சதம் போட்டுள்ளார் சச்சின்.மேலும் இந்திய வீரர் ஒருவர் அன்னிய மண்ணில் 100 போட்டிகளில் ஆடியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே இது சச்சினின் சாதனைகளில் மேலும் ஒன்றாக சேர்ந்துள்ளது.அதேசமயம், லார்ட்ஸில் ஏமாற்றிய சச்சின், டிரன்ட்பிரிட்ஜில் ஏமாற்ற வாய்ப்பில்லை என்று கருதலாம். காரணம், லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அதிகபட்சம் 37 ரன்கள் வரை மட்டுமே அவர் எடுத்துள்ளார். ஆனால் டிரன்ட்பிரிட்ஜில் ஆறு முறை ஆடி 469 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரியும் 78 ஆக உள்ளது. அதில் 1996ம் ஆண்டு 177 ரன்களைக் குவித்துள்ளார். 2002ல் 92 ரன்களையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 91 ரன்களையும் எடுத்துள்ளார். எனவே இந்த முறையும் அவர் சிறப்பான ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது என்று ஆறுதல் படலாம்.மேலும் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் எந்த ஒரு இந்திய வீரரையும் விட சச்சின்தான் அதிக அளவில் ரன்கள் எடுத்துள்ளார். எனவே இந்திய ரசிகர்கள் பெருத்த தெம்புடன் இப்போட்டியைக் காணலாம்.வெளிநாட்டில் 100வது டெஸ்ட் போட்டியை ஆடும் சச்சின், கூடவே ஒரு சதத்தையும் போட்டு, 100வது சதத்தையும் எடுத்தால் ரசிகர்கள் பூரிப்படைவார்கள்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...