மூன்றாம் கண்.,: துப்பாக்கியுடன் ராகுலை நெருங்க முயன்றவர் கைது

Pages

Thursday, July 7, 2011

துப்பாக்கியுடன் ராகுலை நெருங்க முயன்றவர் கைதுஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தியின் பாதயாத்திரையின்போது கைத்துப்பாக்கியுடன் அவரை நெருங்க முயன்ற இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அலிகார் மாவட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும்போது அவரது பாதுகாப்பு வளையம் அருகே ஹரி மோகன் சர்மா என்பவர் கைத்துப்பாக்கியுடன் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சிறப்புப் பாதுகாப்புப் படையினர் இன்று காலை 8.30 மணியளவில் கைது செய்து உடனடியாக உத்தரப்பிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் அலிகார் மாவட்டத்தின் தப்பல் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர் என உள்ளூர் பிரமுகர்கள் தெரிவித்தனர்.விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்தில் இன்று 3-வது நாளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...