மூன்றாம் கண்.,: காஷ்மீர் பிரிவினைவாதிஅமெரிக்காவில் கைது

Pages

Thursday, July 21, 2011

காஷ்மீர் பிரிவினைவாதிஅமெரிக்காவில் கைது


பாக். ஐ.எஸ்.ஐ.யிடம் பயிற்சி பெற்ற காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவரும், அமெரிக்க காஷ்மீர் கவுன்சில் இயக்குனருமான அமெரிக்காவைச் சேர்ந்த குலாம் நபி ஃபாய்(62) , என்பவரை அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர். ஆஜர்படுத் தப்பட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த குலாம்நபிஃபாய். அங்கு காஷ்மீர் அமெரிக்க கவுன்சில்(கே.ஏ.சி) அமைப்பின் இயக்குனராக இருந்தார். முன்னதாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யிடம் நான்கு வெவ்வேறு பெயர்களில் போலியாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு பயிற்சி பெற்றார். இவரை அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் வைத்து எப்.பி.ஐ. அமைப்பினர் கைது செய்தனர். இவர் மீது 43 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுளளது. இதில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 4 ஆயிரம் முறை ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்புகொண்டுள்ளதாகவும், 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 2 ஆயிரம் முறை தொடர்பு கொண்டிருந்ததாகவும், எப்.பி.ஐ என்ற அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குலாம்நபி-பை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை இன்று கோர்டில் தாக்கல் செய்கின்றனர். அமெரிக்காவில் இருந்‌து கொண்டே, ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் அமெரிக்க காஷ்மீர் கவுன்சில் இயக்குனராகவும் இருந்து கொண்டு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார். மேலும் இவர் நடத்திய பல்வேறு ரகசிய கூட்டங்களுக்கு ,காஷ்மீரின் ஹூரியத் மாநாட்டு கட்சியின் ‌தலைவர் மிர்வாஸ்-ஒமர் பரூக் கலந்து கொண்டுள்ளார் என்பதும் பாகிஸ்தான் அரசிடமிருந்து கடந்த 2003-ம் ஆண்டு முதல்2006-ம் வரை தனது காஷ்மீர் அமெரிக்கன் கவுன்சில் அமைப்பிற்கு 4 மில்லியன் டாலர் வரை ‌நன்கொடையாக பெற்று வந்ததாக எப்.பி.ஐ. அமைப்பினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் குலாம்நபி-பை ,ஒரு சமூக ஆர்வலர் என இந்தியாவைச் சேர்ந்த சில அமைப்புகள் கூறி வருகின்றன.
 இவர் அலெக்சாண்ட்ரியா கோர்டில்

Share/Bookmark

1 comment:

 1. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...