மூன்றாம் கண்.,: 400 விக்கெட்! ஹர்பஜன் சிங் சாதனை

Pages

Friday, July 8, 2011

400 விக்கெட்! ஹர்பஜன் சிங் சாதனை


பாரம்பரிய மிக்க இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் அனில் கும்ப்ளேவிற்குப் பிறகு 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஹர்பஜன் சிங் இந்திய சுழற்பந்து வீச்சு என்ற பாரம்பரியத்திற்கு மேலும் பெருமைகளைச் சேர்த்தவராகிறார்.
434 விக்கெட்டுகளை வீழ்த்திய கபில்தேவ், 619 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ளே போன்று ஹர்பஜன் சிங்கும் மைதானத்தில் ஒரு போராளி என்றால் அது மிகையாகாது. பேடி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கட்ராகவன், திலிப் தோஷி, சிவராம கிருஷ்ணன், மணீந்தர் சிங், அனில் கும்ளே வரிசையில் தற்போது ஹர்பஜன் சிங்கின் மைல்கல் ஒரு பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் தற்போதைய உலக சுழற்பந்து வீச்சாளர்களில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் என்ற வகையில் முரளிதரனின் 800 விக்கெட்டுகள் சாதனைக்கு அடுத்த இடத்தில் ஹர்பஜன் சிங்கே உள்ளார். சௌரவ் கங்கூலியின் தலைமையில், ஜான் ரைட் பயிற்சியாளர் பொறுப்பேற்றவுடன் ஆஸ்ட்ரேலியா அணி ஸ்டீவ் வாஹ் தலைமையில் இங்கு வந்தபோது ஸ்டீவ் வாஹ் தலைமையில் 15 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று மும்பையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி 16 டெஸ்ட் போட்டிகள் தொடர் வெற்றி என்ற சாதனையை நிகழ்த்தியது. ஆனால் அப்போதுதான் உருவானார் இந்த ஹர்பஜன் சிங். கொல்கத்தாவில் அந்த புகழ் பெற்ற டெஸ்ட் போட்டியில் லஷ்மண் 281 ரன்களும், திராவிடின் சதமும் ஃபாலோ ஆன் கொடுத்ததையஏ ஸ்டீவ் வாஹிற்கு மறக்கடிக்க பிற்பாடு ஹர்பஜன் வீசிய பந்து வீச்சு அந்த டெஸ்ட் போட்டியை நமக்கெல்லாம் மறக்க முடியாத ஒன்றாக்கியது. அந்த டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளை 196 ரன்களுக்கு வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹேட்ரிக் சாதனை புரிந்தார் ஹர்பஜன் சிங். இதுதான் இந்திய வீச்சாளர் டெஸ்ட் போட்டியில் சாதிக்கும் முதல் ஹேட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி நாளன்று தேநீர் இடைவேளை வரை ஆஸ்ட்ரேலியா 161/3 என்று இருந்தது. அப்போது ஆட்டம் டிரா என்றே பலரும் கருதினர். ஆனால் மீண்டும் ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர் சுழற்பந்து வீச்சு ஆஸ்ட்ரேலியாவுக்கு அதிர்ச்சி தரும் தோல்வியை பெற்றுத் தந்தது. அதற்கு அடுத்த சென்னைப் போட்டியில் ஹர்பஜன் சிங் 217 ரன்கள் கொடுத்து 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசியில் இந்தியா 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கிளென் மெக்ராவைக் கண்டு சற்றும் பயப்படாமல் ஹர்பஜன் சிங் அவரது பந்தை கவர் திசையில் அடித்து வெற்றிபெறச் செய்தார். அப்போதே ஆஸ்ட்ரேலியர்கள் கூறிவிட்டனர். இவர் இன்னும் சில காலங்களுக்கு உலகை ஆள்வார் என்று!



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...