மூன்றாம் கண்.,: சச்சினை 100-வது சதமடிக்க விடமாட்டோம்: இங்கிலாந்து

Pages

Wednesday, July 20, 2011

சச்சினை 100-வது சதமடிக்க விடமாட்டோம்: இங்கிலாந்து
இங்கிலாந்து தொடரில் சச்சினை 100-வது சர்வதேச சதமடிக்கவிட மாட்டோம் என்று இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாட்டு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை(21-ம் தேதி) லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இதுவரை விளையாடிய சர்வதேச போட்டிகளில் 99 சதம் அடித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் விளையாடவிருக்கும் அவர் 100-வது சதத்தை அடிப்பார் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான் கூறியதாவது
,
சச்சின் இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக விளையாடியதில்லை. அவர் ஒரு சிறந்த வீரர். அவரை வீழ்த்துவதிலேயே குறியாக இருந்தால் அது எங்கள் அணிக்கு தான் ஆபத்து. இந்திய அணியில் சச்சின் தவிர பல திறமையான வீரர்கள் உள்ளனர். சச்சினை மற்றும் குறிவைத்தால் மற்றவர்கள் ரன் குவித்துவிடுவார்கள். சச்சின் 100-வது சர்வதேச சதத்தை அடிக்கக் காத்திருக்கிறார். அதற்கு அவர் இன்னும் 6 அல்லது 7 மாதங்களாவது காத்திருக்க வேண்டும். இந்த தொடரில் அவரை சதமடிக்கவிட மாட்டோம். கேப்டன் டோணி ஒரு முக்கியமான வீரர். அவர் முன்வரிசையில் களமிறங்கினால் அது எதிரணிக்கு ஆபத்தாகிவிடும் என்றார்.
Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...