மூன்றாம் கண்.,: அமெரிக்கா வல்லரசு இல்லை

Pages

Tuesday, July 5, 2011

அமெரிக்கா வல்லரசு இல்லை



உலகின் ஒரே வல்லரசாக மிஞ்சி இருக்கும் அமெரிக்கா இனியும் வல்லரசு இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அமெரிக்கர்களே இத்தகைய எண்ணம் கொண்டிருப்பது,
கருத்து கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற வார பத்திரிகையான டைம் இதழ் ஆஸ்பன் கழகத்தோடு இணைந்து அமெரிக்கர்கள் மத்தியில் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் பங்கேற்ற 3 அமெரிக்கர்களில் இரண்டு பேர் அமெரிக்கா வல்லரசாக தொடர்வதாக கருதவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க அதிபர்கள் சர்வதேச விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை கைவிட்டு உள்ளூர் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும், மற்ற பிரச்சனைகளை விட பொருளாதார சீர்குலைவே ஆபத்தானது என்றும் பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...