மூன்றாம் கண்.,: நடிக‌ர் ராம்கியும், நிரோஷா வீடுக‌ள் ஏலம்

Pages

Saturday, July 16, 2011

நடிக‌ர் ராம்கியும், நிரோஷா வீடுக‌ள் ஏலம்


வ‌ங்‌கிக‌ளி‌ல் வா‌ங்‌‌கிய பண‌த்தை செலு‌த்த தவ‌றியதா‌ல் நடிகை ‌நிரோஷா, நடிக‌ர் ‌ரா‌ம்‌கி ஆ‌கியோ‌ரி‌ன் ‌‌வீடுக‌ள் வரு‌ம் 18ஆ‌ம் தே‌தி ஏல‌த்‌‌தி‌ல் ‌விட‌‌ப்படு‌கிறது.
 'செ‌ந்தூர‌ப்பூவே' பட‌த்‌தி‌ல் ஜோடியாக நடி‌த்த ராம்கியும், நிரோஷாவும் ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ஜெமினி பார்சன் அடு‌க்குமாடி குடியிருப்பில் கணவன்- மனைவியாக வ‌ா‌ழ்‌ந்து வரு‌‌கி‌ன்றன‌ர்.இந்த அடு‌க்குமாடி குடி‌யிரு‌ப்‌பி‌ல் இர‌ண்டு ‌வீடுகளை வை‌த்து‌ள்ள இவ‌ர்க‌ள் வீடுகளை அடமானம் வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், கார்ப்பரேஷன் வங்கியிலும் பல லட்சம் ரூபாய் கடனாக பெற்று‌ள்ளன‌ர். ஆனால் அதற்கு வட்டி செலுத்தவில்லை. இதனால் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை கோடியை தாண்டியது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இரண‌்டு வ‌ங்‌கிகளும் வீடுகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன. நிரோஷா - ராம்கி வீடுகள் ஆக‌ஸ்‌ட் 18‌ஆ‌ம் தேதி பகல் 1 மணிக்கு பகிரங்க ஏலத்தில் விடப்படும் என்று வ‌ங்‌‌கி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறைந்தபட்ச ஏல கேட்பு தொகை ரூ.2 கோடியாக வ‌ங்‌கி நிர்ணயி‌த்து‌ள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...