மூன்றாம் கண்.,: ஒட்டிப்பிறந்த பெண் குழந்தைகள் மருத்துவமனைக்கே தானம்

Pages

Saturday, July 16, 2011

ஒட்டிப்பிறந்த பெண் குழந்தைகள் மருத்துவமனைக்கே தானம்மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதி, ஒட்டிப்பிறந்த தங்களது பெண் குழந்தைகளை, அவை பிறந்த கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனைக்கே தானமாக கொடுத்துள்ளனர்.
மத்திய பிரதேச தலைநகரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதி ஹரிராம்-மாயா யாதவ். நிறைமாத கர்ப்பிணியான மாயா சில தினங்களுக்கு முன் பேதுல் பகுதியில் உள்ள மிஷனரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, மார்பு பகுதியிலிருந்து வயிறு வரை ஒட்டிய நிலையில் இரு பெண் குழந்தைகள் அவருக்குப் பிறந்தது. அந்தக் குழந்தைகளை தனித்தனியாக பிரிப்பதற்கான அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்பதை அறிந்த ஹரிராம், தனது குழந்தைகளை அந்த மருத்துவமனைக்கே தானம் அளிக்க முடிவு செய்தார். குழந்தைகளை வளர்க்கவே சிரமப்படும் நிலையில், அவ்வளவு பெரிய தொகையை தங்களால் செலவழிக்க முடியாது என்பதால், தானம் அளிப்பதாக 50 ரூபாய் பத்திரத்தில் எழுதிக் கொடுத்துவிட்டனர். இரு குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும், அறுவைச் சிகிச்சைக்கான செலவை ஏற்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியபோதும் ஹரிராம் தம்பதிகள் இந்த முடிவை எடுத்துவிட்டனர்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...