மூன்றாம் கண்.,: அன்னாஹசாரே சோனியாவை சந்தித்தார்.

Pages

Saturday, July 2, 2011

அன்னாஹசாரே சோனியாவை சந்தித்தார்.


லோக்பால் மசோதா குறித்து அன்னாஹசாரே புதுடில்லியில் சோனியாவை சந்தித்தார். அவருடன் மக்கள் பிரதிநிதிகுழுவை சேர்ந்த கெஜிரிவால் மற்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டனர்.
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய ஹசாரே சோனியா‌வை சந்தித்து லோக்பால் மசோதா குறித்து 15க்கும் மேற்பட்ட விசயங்கள் குறித்து சோனியாவிடம் விளக்கியுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ‌‌‌கேட்டுக்கொண்டதாகவும், தங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக சோனியா உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்‌. மேலும் அவர், திருத்தப்பட்ட லோக்பால் மசோதா பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில் உண்ணாவி‌ரதம் இருப்பேன் என ஹசாரே கூறினார்.சந்திப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜனார்த்தன் திரிவேதி கூறுகையில், சந்திப்பு அர்த்தமுள்ளதாக இருந்ததாகவும், மசோதா எவ்வாறு தாக்கல் செய்யப்படுகிறதோ அதனை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளும் என கூறியுள்ளது.

 

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...