மூன்றாம் கண்.,: தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டது

Pages

Friday, July 8, 2011

தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டதுதயாநிதி மாறன் பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தயாநிதி மாறனுக்குத் தொடர்பு உள்ளது என்று உச்ச நீதி மன்றத்தில் சி.பி.ஐ. நேற்று முன்தினம் தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டதன் அடிப்படையில் அவரை விலகும்படி பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியதை அடுத்து வியாழன் பிற்பகல் 1.15 மணிக்கு பிரதமரிடம் விலகல் கடிதத்தை அளித்தார். 2 ஜி தொடர்பான வழக்கில் பதவி விலகும் திமுகவைச் சேர்ந்த இரண்டாவது கேபினட் அமைச்சர் தயாநிதி ஆவார். தயாநிதி மாறன் பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. ஒரு தலைமை காவலர் மற்றும் நான்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து உடனே திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர்
Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...