மூன்றாம் கண்.,: ஸ்டாலினுடன் வாக்குவாதம்; கோபித்துக் கொண்டு கிளம்பிய கருணாநிதி!

Pages

Saturday, July 16, 2011

ஸ்டாலினுடன் வாக்குவாதம்; கோபித்துக் கொண்டு கிளம்பிய கருணாநிதி!



திமுகவின் அடுத்த தலைவராக தம்மை அறிவிக்க வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கருணாநிதி கோபித்துக் கொண்டு மகாபலிபுரத்திற்கு சென்றதாக வெளியாகி உள்ள உடன்பிறப்புகளிடம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
2ஜி ஊழல் வெடித்து திமுகவை சேர்ந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சனையின் தொடக்கம் முதலே இதனை சரிவர கட்சி கையாளவில்லை என்ற் அதிருப்தி ஸ்டாலினுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, 2ஜி விவகாரத்தினால் பதவியிழந்த ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு பதிலாக திமுகவை சேர்ந்த வேறு இரண்டு பேரது பெயர்களை பரிந்துரைக்குமாறு காங்கிரஸ் கட்சி, திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டது.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜியே, சென்னைக்கு வந்து கருணாநிதியை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால் 2ஜி விவகாரத்தில் தங்களுக்கு உதவவில்லையே என்று காங்கிரஸ் மீது தற்போது அதிருப்தியில் உள்ள கருணாநிதிக்கு, அமைச்சரவையில் சேர விருப்பமில்லை என்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. ஆனால் அமைச்சரவையில் இரண்டு பேரை சேர்க்கலாம் என்று ஸ்டாலின் விரும்பியதாகவும், இதற்காக திமுக எம்.பி. ஏ.கே. விஜயன் உள்ளிட்ட இரண்டு பேரை அவர் கருணாநிதியிடம் பரிந்துரைத்ததாகவும், ஆனால் கருணாநிதி மறுத்துவிட்டதால் ஸ்டாலின் அப்போது கோபமுற்றதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...