மூன்றாம் கண்.,: மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்

Pages

Friday, July 15, 2011

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்



மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார். அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...