மூன்றாம் கண்.,: லண்டன் கிரிக்கெட் மைதானத்தி்ல் தமிழ் ஈழக் கொடியுடன் ஓடியவர் கைது

Pages

Monday, July 4, 2011

லண்டன் கிரிக்கெட் மைதானத்தி்ல் தமிழ் ஈழக் கொடியுடன் ஓடியவர் கைது
லண்டன் லார்ட்ஸ் கிரி்க்கெட் மைதானத்தில் நேற்று, இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையே 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது தமிழ் ஈழக் கொடியுடன் மைதானத்தில் ஓடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழரான அவரது பெயர் பிரசன்னா. தமிழ் ஈழக் கொடியுடன் அவர் மைதானத்தில் ஓடியதால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே, கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஈழத் தமிழர்கள் பலர் இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன் துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கொடியுடன் பிரசன்னா மைதானத்தில் ஓடிய காட்சி, பிரிட்டனின் ஸ்கை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...