மூன்றாம் கண்.,: மு.க.ஸ்டாலின் கைது பழிவாங்கும் நடவடிக்கை கருணாநிதி கண்டனம்

Pages

Saturday, July 30, 2011

மு.க.ஸ்டாலின் கைது பழிவாங்கும் நடவடிக்கை கருணாநிதி கண்டனம்


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது, பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:ஸ்டாலின் கைது: திமுக ஆட்சியிலும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. அப்போது போராட்டம் நடத்தியவர்களை தமிழக அரசு எப்படி நடத்தியது என்பதும், காலையில் கைது செய்து, மாலையில் அவர்களை விடுவித்தது என்பதும் உங்களுக்கெல்லாம் தெரியும். இப்போதைய ஆட்சியில் பழிவாங்கும் நடவடிக்கைகளும், அதற்கு மேலும் மேலும் தூபம் போடும் காவல்துறையினரின் நடவடிக்கைகளும் அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.
போராட்டம்: ஆகஸ்ட் 1-ம் தேதி அறிவித்துள்ள போராட்டம் காவல் துறையின் அராஜகங்களைக் கண்டிப்பதற்காகவும், பொய் வழக்குகள் போடுவதைக் கண்டிப்பதற்காகவும் அறிவிக்கப்பட்டு நடைபெறும் போராட்டம். அதனால் திட்டமிட்டபடி அமைதியான முறையில், அற வழியில் போராட்டம் நடைபெறும். கருணாநிதி தலைமையில் போராட்டம்?... அவசியப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றிச் சிந்தித்துச் செயல்படுவோம் என்று கருணாநிதி கூறினார் பழிவாங்கல்: பெங்களூரில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதின்றம் தடையாணை பிறப்பித்த காரணத்தால், அதற்குப் பழிவாங்கும் வகையில்தான் இப்படியெல்லாம் செய்கிறாரா? என்று கேட்டதற்கு, "பழி வாங்குவதற்கு அவர்களுக்குக் காரணம் வேண்டியதில்லை. பழி வாங்க வேண்டுமென்று நினைத்தாலே பழி வாங்குவார்கள்' என்று கருணாநிதி கூறினார்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...