மூன்றாம் கண்.,: இலங்கைக்கு ஐநா மனித உரிமை ஆணையர் எச்சரிக்கை

Pages

Saturday, July 2, 2011

இலங்கைக்கு ஐநா மனித உரிமை ஆணையர் எச்சரிக்கை

போர்க்குற்றம் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு நீண்டகாலம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஐநா மனித உரிமைகள் பிரிவின் ஆணையர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார் நம்பகமான விசாரணையை மேற்கொள்ள தவறினால்,
சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகளை இலங்கை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசு முன்பு மேற்கொண்ட விசாரணை விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப் படவில்லை என்றும், ஒருவருக்கு கூட தண்டனை வழங்கப்படவில்லை என்றும் நவநீதம்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் மீதான விசாரணை விரைவாக நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா கடந்த வாரம் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...