மூன்றாம் கண்.,: சிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம்

Pages

Sunday, July 3, 2011

சிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம்

சென்னை தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்பில் பழம் பறிப்பதற்காக நுழைந்த சிறுவன் தில்ஷான் (13) அங்குள்ள ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சிறுவனின் உறவினர்கள், பொதுமக்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தீவுத்திடல் பகுதி இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களின் 2-வது மகன் தில்ஷான். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதிய வேளையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் விழுந்து கிடக்கும் பாதாம் பழங்களை எடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ராணுவ வீரர் சிறுவன் தில்ஷானை துப்பாக்கியால் சுட்டாராம். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர்கள், அவனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உறவினர்கள், அப்பகுதியினர் அனைவரும் ராணுவக் குடியிருப்பின் அருகே திரண்டனர். ஆனால், அதற்குள்ளாக சிறுவனை அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்துவிட்டதாக அங்கிருந்த ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் இந்திராநகர் பகுதியினர் சிலர் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், சிறுவனை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலையிலும் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸôர் ஈடுபட முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீஸôர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு சிறுவன் தரப்பினரும் போலீஸôரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போஸீஸôர் ஒருவர் காயமடைந்தார்.  இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தான். இதனால் சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், உதயகுமார் ஆகியோர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இது குறித்து சிறுவனின் உறவினர்கள் கூறியதாவது: ராணுவக்குடியிருப்புக்குள் அனுமதியில்லாமல் செல்வது தவறுதான். ஆனால் வளாகத்துக்குள் நுழைந்தவர்கள் தீவிரவாதிகள் அல்ல. பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்.
ஆனால், நாட்டை பாதுகாக்கும் பணியில் உள்ள ராணுவ வீரர் தீவிரவாதியை போல சிறுவன் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். வடக்கு மண்டல இணை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவனை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ராணுவக் குடியிருப்புக்குள் பழங்களை எடுப்பதற்காக சென்ற சிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் குடும்பத்துக்கு ரூ.5லட்சம்: இறந்த சிறுவன் தில்ஷான் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...