மூன்றாம் கண்.,: சன், "டிவி' மீதான புகார்களை விசாரிக்க தனிப் பிரிவு

Pages

Tuesday, July 19, 2011

சன், "டிவி' மீதான புகார்களை விசாரிக்க தனிப் பிரிவுநித்யானந்தா சீடர்கள், நடிகை ரஞ்சிதா ஆகியோர், சன், "டிவி' மீது கொடுத்த புகார்கள், நித்யானந்தா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரிக்க, தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக,
சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி தெரிவித்தார். நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா இருப்பது போன்ற வீடியோ, சன், "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டது தொடர்பாகவும், அதன் பின் நடந்த தாக்குதல் தொடர்பாகவும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நித்யானந்தாவின் சீடர்கள், பிடதி ஆசிரம மேலாளர் ஆகியோர், கமிஷனர் திரிபாதியிடம் புகார்கள் அளித்தனர். தொடர்ந்து, நடிகை ரஞ்சிதாவும், "மார்பிங்' செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியதாக, சன், "டிவி' மீது புகார் அளித்தார். இந்த புகார், மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்படுவதாக கமிஷனர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நித்யானந்தா, தன்னிடம், 100 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, சன்,"டிவி' நிர்வாகம் மீதும், தினகரன் நிர்வாகத்தின் மீதும் புகார் தெரிவித்தார். இது தொடர்பான புகார், கமிஷனர் அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கும் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மந்தைவெளியில் வங்கி அதிகாரி கொலையில் கொலையாளி கைது செய்தது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கேள்விகளுக்கு பதிலளித்து கமிஷனர் திரிபாதி கூறியதாவது  சன், "டிவி' மீது, நித்யானந்தா, ரஞ்சிதா அளித்த புகார்களின் மீதான விசாரணை எந்த நிலையில் உள்ளது? எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளதா? இது வரை ஏழு புகார்கள் வந்துள்ளன. ரஞ்சிதா அளித்த புகாரில் எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது. ரஞ்சிதா, நித்யானந்தா அளித்த புகார்கள் தொடர்பாகவும், எதிர் தரப்பினர் அளித்த புகார்கள் தொடர்பாகவும், தனிப்பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. நித்யானந்தா தொடர்பான வழக்குகள், பெங்களூரு கோர்ட்டில் உள்ளதால், இந்த வழக்குகளும் அங்கு மாற்றப்படுமா? அது வழக்கு விசாரணை அதிகாரியின் முடிவைப் பொறுத்தது. சன், "பிக்சர்ஸ்' சக்சேனா, ஐயப்பன் மீது எத்தனை வழக்குகள் தற்போது பதியப்பட்டுள்ளன? அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமா? சக்சேனா மீது தற்போது ஐந்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வழக்கு விசாரணையில் உள்ளது. விசாரணை அதிகாரி பரிந்துரைத்தால், குண்டர் சட்டத்தில் போடுவது பற்றி பார்த்து முடிவெடுக்கப்படும்.
Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...