மூன்றாம் கண்.,: கடனை அடைத்தால்தான் இனி கச்சா! - இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

Pages

Tuesday, July 19, 2011

கடனை அடைத்தால்தான் இனி கச்சா! - இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை


இந்தியாவின் எண்ணெய்த் தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் நாடுகளில் முதன்மையாக உள்ள ஈரான், இனி இந்தியாவுக்கு கடனாக எண்ணெய் தர முடியாது என கறாராக கூறிவிட்டது.
கச்சா எண்ணை இறக்குமதிக்கு இந்தியா பெரிதும் வளைகுடா நாடுகளையே நம்பி உள்ளது. சவூதிஅரேபியாவில் இருந்து அதிகமான அளவுக்கு கச்சா எண்ணை இந்தியாவுக்கு கிடைக்கிறது. அடுத்தபடியாக ஈரான் நாட்டில் இருந்து அதிக கச்சா எண்ணை இறக்குமதியாகிறது. ஒவ்வொரு மாதமும் ஈரானில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணை இந்தியா பெறுகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஒட்டு மொத்த கச்சா எண்ணை தேவையில் 12 சதவீதத்தை ஈரான்தான் பூர்த்தி செய்கிறது. இந்த கச்சா எண்ணைக்காக ஈரானுக்கு கொடுக்க வேண்டிய கடன் 5 பில்லியன் டாலர். இந்தக் கடனை அடைக்காமல் இந்தியா இழுத்தடிப்பதால் கடுப்பான ஈரான், இனி இந்தியாவுக்கு எண்ணெய் கிடையாது என அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தத் தொகை வந்தாகவேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆகஸ்டிலிருந்து எண்ணெய் சப்ளை முற்றாக நிறுத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் நாட்டு எண்ணெய் அமைச்சகம் இந்த எச்சரிக்கையை எழுத்துமூலமாக இந்தியாவுக்கும் அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...