மூன்றாம் கண்.,: கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக்கு வலைவீச்சு

Pages

Thursday, July 28, 2011

கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக்கு வலைவீச்சு


திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரு செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் சிறுவன் குரல் கேட்டது.
அவன் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டான். உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அந்த செல்போன் நம்பரை வைத்து சிறுவனைத் தேடி வருகின்றனர். சிறுவர்கள் இதுபோன்று போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 14-ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த ஹர்ஷா என்ற சிறுவன் எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு உள்ளதாகக் கூறி பிடி்பட்டான். இதேபோன்று கடந்த 25-ம் தேதி சென்னையி்ல் ஆங்காங்கே வெடிகுண்டு வைக்கப்போவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பழைய வண்ணாரப்பேட்டை சலீம் என்பவரின் மகன் யூசுப் என்ற சிறுவனும் பிடிபட்டான் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணைப் பயன்படுத்தி அதை தமிழகத்தில் அறிமுகம் செய்தவரான கருணாநிதிக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...