மூன்றாம் கண்.,: நில அபகரிப்பு புகார்கள். சிக்கும் திமுக பிரமுகர்கள்

Pages

Wednesday, July 6, 2011

நில அபகரிப்பு புகார்கள். சிக்கும் திமுக பிரமுகர்கள்



சேலம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள சின்னக்கொல்லுப்பட்டியைச்சேர்ந்தவர் முத்துக்குமார்.
இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் ஜாகீர் அம்மாபாளையம் இடத்தில் உள்ளது.இந்த நிலத்தை கடந்த 2010ம் ஆண்டு சூர்யா தங்கவேலு என்பவர் தன்னுடைய நிலம் என்று கூறி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரனுக்கு பவர் கொடுத்து பத்திரம் பதிவு செய்து கொடுத்துவிடுகிறார். இது சம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது நில அபகரிப்பு சம்பந்தமான புகார்களை பதிவு செய்து வரும் சேலம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் நேற்று முத்துக்குமார் புகார் அளித்துள்ளார்.அந்தப் புகாரின் அடிப்படையில் ராஜா என்கிற ராஜேந்திரன் மீதும், சூர்யா தங்கவேலு மீதும் சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் திருச்சியில் கலைஞர் அறிவாலயத்துக்காக 1.86 ஏக்கர் தனியார் நிலம் அபகரிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்துக்கு நெருக்கமான ராஜகோபால் என்ற தொழிலதிபரும், திமுக பிரமுகர் குடமுருட்டி சேகரின் உறவினர் செல்வேந்திரன் என்பவர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது, நேற்று திருச்சி காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நில அபகரிப்பு தொடர்பான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜி.ஆர்.சுரேஷ்குமார் என்பவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார்.மேலும் மு.க அழகிரியின் மனைவி மீது நிலமோசடி புகர் ஒன்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நில அபகரிப்பாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.கண்ணன் எச்சரித்துள்ளார். நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு டி.எஸ்.பி., ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப்இன்ஸ்பெக்டர்கள், 4 தலைமைக் காவலர்கள் ஆகியோரைக் கொண்ட தனிப்பிரிவு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கக் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...