மூன்றாம் கண்.,: அரசியல்வாதிகளின் நல்ல நடிப்பு

Pages

Sunday, September 18, 2011

அரசியல்வாதிகளின் நல்ல நடிப்பு


குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நேற்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். இதில் ஏராளமான பா.ஜ. பிரமுகர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, நேற்று முன்தினம் உண்ணாவிரதம் தொடங்கினார். முதல் நாளில் அத்வானி, அருண் ஜேட்லி உள்ளிட்ட பா.ஜ. மூத்த தலைவர்கள் பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மதத் தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். நேற்று 2வது நாள் உண்ணாவிரதத்தில் நாடு முழுவதும் இருந்து பா.ஜ தலைவர்கள் பலர் வந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜ செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், ஷாநவாஸ் உசேன், டெல்லி பா.ஜ தலைவர் ஜித்தேந்திர குப்தா உட்பட பலர் வந்திருந்தனர். குஜராத் முழுவதிலும் இருந்து பல மதத் தலைவர்கள் வந்திருந்தனர். வார இறுதி விடுமுறை என்பதால் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் மோடியின் உண்ணாவிரதத்தை பார்வையிட வந்திருந்தனர். கூட்டத்தினரை கட்டுபடுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மோடியின் உண்ணாவிரதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிலர் நரோதா பதியா என்ற பகுதியில் நேற்று போராட்டம் நடத்தினர். மோடி உண்ணாவிரதம் இருக்கும் பல்கலைக்கழக அரங்கிலிருந்து 8 கி.மீ தொலைவில் இந்த பகுதி உள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட என்.ஜி.ஓ அமைப்பினர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.மோடி 2ம் நாளாக உண்ணாவிரதம் இருப்பதுபோல், குஜராத் காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா, அர்ஜூன் மோத்வாடியா ஆகியோர் மோடிக்கு எதிராக நேற்று 2ம் நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். சமர்பதி ஆசிரமத்தின் நடைபாதையில் கட்டிலில் கொசுவலை கட்டி இரவில் தூங்கினர். ஸி100 கோடி வீண்: காங்கிரஸ் புகார் மோடியின் உண்ணாவிரதம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோகன் பிரகாஷ் கூறியதாவது: அரசு நிதியில், ஏ.சி. அரங்கில் மோடி நடத்தும் உண்ணாவிரத நாடகத்தால் குஜராத் மக்களின் வரிப்பணம் ஸி100 கோடி வீணாகியுள்ளது. அவரது உண்ணாவிரதம் பா.ஜ கட்சிக்குள் நல்லுறவை கெடுத்தது மட்டும் அல்லாமல், தே.ஜ. கூட்டணியிலும் சத்பாவனாவை கெடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஒதுங்கியிருப்பதாக ஐக்கிய ஜனதா கட்சி தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார். இது தே.ஜ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. நாட்டில் பலர் வறுமையால் பட்டினி கிடக்கின்றனர். அவர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால், தனி மனிதரின் உண்ணாவிரதத்தை பலர் புகழ்ந்து பேசுகின்றனர்.
இவ்வாறு மோகன் பிரகாஷ் கூறினார்.

Share/Bookmark

1 comment:

  1. நடிகர்கள் அரசியல் வாதிகள் ஆவது அரசியல் வாதிகளுக்கு நடிக்கக் கற்றுக் கொடுத்துள்ளது.மோடியின் இந்த நாடகம் ஓட்டு வேட்டைக்குப் போடும் நடிப்பு.ஏமாறுவது அவரா அல்லது மக்களா என்பது தெரியும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...