மூன்றாம் கண்.,: மாநில இறகுப் பந்து: அரை இறுதியில் ஷாலினி ஜோடி

Pages

Saturday, September 10, 2011

மாநில இறகுப் பந்து: அரை இறுதியில் ஷாலினி ஜோடி


 சிவகாசியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் நடிகை ஷாலினி-பிரகாஷ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

விருதுநகர் மாவட்ட இறகுப் பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி சிவகாசியில் உள்ள ஏ.ஜெ. உள்ளரங்கில் நடைபெற்று வருகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நடிகை ஷாலினி-பிரகாஷ் ஜோடி 21-12, 21-15 என்ற நேர் செட்களில் சென்னை சங்கமேஸ்வரன்-முனீஸ்சுந்தரதேவி ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இரட்டையர் பிரிவு: மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் ஷாலினி- பிரியா ஜோடி 21-11, 21-8 என்ற நேர் செட்களில் சென்னை ஜானகி- திவ்யலட்சுமி ஜோடியை வீழ்த்தியது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...