மூன்றாம் கண்.,: நண்பன் படப்பிடிப்பில் இலியானா காயம்

Pages

Friday, September 9, 2011

நண்பன் படப்பிடிப்பில் இலியானா காயம்


தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை இலியானா நண்பன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த நடன ஒத்திகையில் கால் தடுமாறி விழுந்ததில் இலியானாவில் கால் முறிந்தது.

ஷங்கர் இயக்கி கொண்டிருக்கும் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்துகொண்டிருக்கிறார். இவர்களுடன் இப்படத்தில் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்தும் நடிக்கிறார்கள். இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காக பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் பராஹான் இலியானாவுக்கு நடன பயிற்சி அளித்தார். அப்போது இலியானா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். மேலும் கால் சரியாக மூன்று வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுத்தியிருக்கிறார்கள்.இதனால் ஹைதராபாத் சென்று விட்டார் இலியானா. தற்போது இலியானாவை தவிர்த்து உள்ள காட்சிகளை படமாக்கிகொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...