மூன்றாம் கண்.,: மன்மோகன் அளித்துள்ள பதில் திருப்தி இல்லை

Pages

Wednesday, March 14, 2012

மன்மோகன் அளித்துள்ள பதில் திருப்தி இல்லை



.நா., சபை மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா

கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக ,பிரதமர் மன்மோகன் அளித்துள்ள பதில் திருப்தி அளிப்பதாக இல்லை,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.தேர்தல் பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து சங்கரன் கோவிலுக்கு செல்லும் முன், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இலங்கையில் நடந்துள்ள போர் குற்றம் தொடர்பாக, இலங்கை மீது .நா., சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என, பிரதமருக்கு இரு கடிதங்கள் எழுதியிருந்தேன். அதற்கு, பதில் அளித்து பிரதமர் மன்மோகன் எழுதியுள்ள கடிதம் நேற்று கிடைத்தது. அவரது கடிதத்தில், எவ்வித உறுதியும் அளிக்கப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் பற்றி, இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டையும் அவர் தெரிவிக்கவில்லை. அவரது பதிலில் .தி.மு..,வுக்கு திருப்தியில்லை. இலங்கைக்கு எதிராக .நா., சபையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை .தி.மு.., தொடர்ந்து ஆதரிக்கும். இந்த தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் .தி.மு.., அமோக வெற்றி பெறும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...