மூன்றாம் கண்.,: 2வது டெஸ்ட்: இந்திய அணி படுதோல்வி

Pages

Monday, August 1, 2011

2வது டெஸ்ட்: இந்திய அணி படுதோல்வி


டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 319 ரன்கள் வித்தியாசத்தில் படுதொல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற வெற்றிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.இங்கிலாந்து அணி இன்றும் அபாரமாக விளையாடியது. பிரெஸ்னன், பிராட் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். பிரெஸ்னன் 118 பந்துகளில் 17 பெளண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்தார். 32 பந்துகளையே எதிர்கொண்ட பிராட் 5 பெளண்டரிகளுடனும் ஒரு சிக்ஸருடனும் 44 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 544 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 478 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. சச்சின் மட்டுமே நிலைத்து ஆடி அரை சதம் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக ஹர்பஜன் விளையாடினார். இவர்கள் இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை 107 ரன்களுக்குக் கொண்டு வந்தனர். சச்சின் 56 ரன்களுக்கும், ஹர்பஜன் 46 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து ஆட வந்த பிரவீன் குமார் 25 ரன்கள் எடுத்தார். மற்ற எவரும் 10 ரன்களைத் தாண்டவில்லை. இறுதியில் 47.4 ஓவர்களில் இந்திய அணி 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து 319 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பிரெஸ்னான் 5 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், பிராட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...