மூன்றாம் கண்.,: இந்தியா மீது தாக்குதல் தொடுக்க அல்காய்தா திட்டம்

Pages

Thursday, August 11, 2011

இந்தியா மீது தாக்குதல் தொடுக்க அல்காய்தா திட்டம்இலியாஸ் காஷ்மீரி தலைமையில் இந்தியா மீது தாக்குதல் தொடுக்க அல்காய்தா திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறைத் தகவல்கள் வந்துள்ளதாக அரசு இன்று அறிவித்தது. உளவுத் தகவல்கள் இது குறித்து எச்சரித்துள்ளதாக நாடாளுமன்றத்தின்
மாநிலங்களவையில் உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்தார். அல்கய்தா, இலியாஸ் காஷ்மீரி, அல்கய்தா-ஹூஜி குழு ஆகியோர் தாக்குதல் தொடுக்கலாம் என உளவுத் துறைத் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். பயங்கரவாதம், பிரிவினைவாதம் என எந்த வகையிலிருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும். வன்முறை அல்லது பயங்கரவாதம் எதிலும் சமரசப் போக்குக்கே இடமில்லை என உறுதி தெரிவித்தார். அல்கய்தாவின் இந்த தாக்குதல் எச்சரிக்கை குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...