மூன்றாம் கண்.,: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது

Pages

Wednesday, August 24, 2011

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது


நிலப் பறிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீட்டில் இன்று அதிகாலை போலீஸார் அவரைக் கைது செய்தனர். துறையூர் டாக்டர், இந்த வழக்கில் தன்னை அவர்கள் அடித்து உதைத்து மிரட்டி இந்த நிலத்தைப் பறித்துக் கொண்டதாக புகார் தெரிவித்திருந்தார். சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ, ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தரராஜுலு உள்ளிட்ட மேலும் 11 பேர் மீது இந்தப் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நேருவின் உறவினரான ராமஜெயம், துணை மேயர் அன்பழகன் ஆகியோருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளது என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிகிறது.  துணைமேயர் அன்பழகன் மீது மேலும் 2 வழக்குகள் இருப்பதால், அவர் இதுவரை தலைமறைவாக உள்ளார். ராமஜெயம் வெளிநாடு சென்றிருக்கிறார்.இன்று காலை கைதான கே.என்.நேரு உள்ளிட்டோர் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு அளித்தார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...