மூன்றாம் கண்.,: மத்திய அரசு இரட்டை நிலை: மோடி குற்றச்சாட்டு

Pages

Sunday, August 14, 2011

மத்திய அரசு இரட்டை நிலை: மோடி குற்றச்சாட்டு


ஒழுக்கம், நேர்மை ஆகிய விஷயங்களில் மத்திய அரசு இரட்டை நிலையை எடுத்து வருகிறது என்று குஜராத் முதல்வர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.


குஜராத் மாநிலம் நாடியாவில் ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியது: அண்ணா ஹசாரே முறையாக நடந்து கொள்ள வேண்டுமென்று கூறும் மத்திய அரசு, போலீஸ் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கவில்லை. குஜராத்தில் தவறு செய்த போலீஸôர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். மாநிலத்தில் அனைத்து துறையையும் தூய்மைப்படுத்தி வருகிறோம். இதன்படிதான் போலீஸ் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசும் எடுத்தால் ஹசாரே போன்றவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது என்றார் மோடி. முன்னதாக குஜராத் அரசால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட இரு ஐபிஎஸ் அதிகாரிகளும் முறையீடு செய்தால் இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிடும் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார். மாநில போலீஸôரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சி இது என்று குற்றம்சாட்டிய மோடி, இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...