மூன்றாம் கண்.,: நடிகர் வடிவேல் ‌மீது நில மோசடி புகார்

Pages

Tuesday, August 2, 2011

நடிகர் வடிவேல் ‌மீது நில மோசடி புகார்


நில மோசடி செய்ததாக நடிகர் வடிவேல் மீது ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவ‌ர் செ‌ன்னை புறநகர் காவ‌ல்துறை ஆணைய‌‌ர் ராஜேஷ்தாசிடம் புகார்
அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.அசோக்நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் அ‌ளி‌த்த புகா‌‌ர் மனு‌வி‌ல், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 93ஆம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலிïரில் உள்ள 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார். இந்த கடன் தொகையை சரிவர செலுத்தாததால் பிணையாக வைக்கப்பட்ட சொத்தை தொழில் முதலீட்டு நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டு பொது ஏலம் விட்டது.இதில் மேற்படி சொத்தை ரூ.20 லட்சத்திற்கு நான் கடந்த 2006ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்து தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தேன். ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் எங்கள் நிலத்தை அபகரிக்க போலி மற்றும் மோசடியாக ஆவணங்களை தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு எனது நிலத்தில் சிலர் ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டுவதாக அறிந்து சென்றேன். அப்போது எஸ்.என்.வடிவேல் இந்த சொத்தை கிரயம் பெற்று தனது மனைவி விசாலாட்சிக்கு கொடையாக 8.4.2009 அன்று கொடுத்து உள்ளார். இது பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு இருப்பதால் எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் விரும்புவதே நடக்கும். இது பற்றி காவ‌ல் நிலையத்தில் புகார் அளித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று என்னை மிரட்டினார்கள். இருப்பினும் 11.9.2009 அன்று காவ‌ல்துறை‌யி‌ல் புகார் செய்தேன். என்னுடைய புகாரை ஏற்றுக் கொண்டு ரசீது கொடுத்துள்ளனர். மேலும் அப்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவன முதன்மை நிர்வாக இயக்குனராக இருந்த ஷீலாராணி சுங்கத்தும் புகார் தந்து உள்ளார். எங்களுக்கு சொந்தமான நிலம் எதிரிகள் கையில் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே மேற்படி அத்துமீறி சட்டவிரோதமாக எங்கள் நிலத்திற்குள் நுழைந்தவர்களை வெளியேற்றி எங்களுடைய நிலத்தை மீட்டு ஒப்படைக்க வேண்டும். அத்துமீறி நுழைந்தவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணைய‌ர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புகாரில் கூறப்பட்டு உள்ள ஆவணங்கள் முறையாக உள்ளதா என விசாரித்து வருகிறார். அத்துமீறி நுழைந்து இருப்பது தெரிய வந்தால் நடிகர் வடிவேலுவும், அவருடைய மனைவியும் கைது செய்யப்படுவார்கள் என்று காவ‌ல்துறை தெரிவித்து‌ள்ளது.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...