மூன்றாம் கண்.,: நடிகை த்ரிஷாவுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம்

Pages

Wednesday, August 3, 2011

நடிகை த்ரிஷாவுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம்


நடிகை த்ரிஷாவுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அவர் மணமுடிக்கப்போகும் மாப்பிள்ளை இளம் தொழில் அதிபரா? அல்லது சாப்ட்வேர் என்ஜினீயரா? என்பது செப்டம்பர் மாதம் தெரிந்து விடும்.


ஜோடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் திரிஷா. லேசா லேசா படத்தில் தான் முதன்முலாக கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அந்தபடம் வருவதற்கு முன்பே மவுனம் பேசியதே படம் வெளியாகிவிட்டது. இந்த படம், 2002-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. கடந்த 10 வருடங்களாக திரிஷா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

இதுதவிர இந்தியிலும் ஒருபடம் பண்ணிவிட்டார். தற்போது த்ரிஷாவுக்கு சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தாலும், சமீப காலமாக சினிமாக்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்கு காரணம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பலமுறை திருமண வதந்திகளில் சிக்கியிருக்கும் த்ரிஷாவுக்கு, இப்போது உண்மையிலேயே திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருக்கும் த்ரிஷாவை, பெண் கேட்டு 2 வரன்கள் வந்துள்ளன. இரண்டு பேருமே சென்னையை சேர்ந்தவர்கள். ஒருவர், இளம் தொழில் அதிபர். இன்னொருவர், சாப்ட்வேர் துறையில் உயர் அதிகாரியாக இருப்பவர். இவர்களில் தன், மனதுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறாராம் திரிஷா. ஆனால் அவர் யார்? என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற இருக்கிறது.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...