மூன்றாம் கண்.,: நிலமோசடி: முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது

Pages

Wednesday, August 31, 2011

நிலமோசடி: முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது


நிலமோசடி வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார். விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்துக்குச் சொந்தமான,
சுமார் ரூ. 60 லட்சம் மதிப்பிலான 61 ஆயிரம் சதுர அடி நிலத்தை, தனது குடும்பத்தாருக்குச் சொந்தமான சிகா கல்வி அறக்கட்டளைக்காக, கடந்த 2007ம் ஆண்டு அமைச்சராக இருந்த பொன்முடி மிரட்டி எழுதி வாங்கினார் என்பது புகாராகும். இதுதொடர்பாக நாராயணசாமி என்பவர் புகார் கொடுத்ததையடுத்து, பொன்முடியை கைது செய்வதற்காக விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு, நிலமோசடி தனிப்பிரிவு டி.எஸ்.பி., ஜெயராஜ், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல் மற்றும் சங்கர் உள்ளிட்ட போலீசார் சென்ற போது, அவர்களை பொன்முடியின் ஆதரவாளர்களும், தி.மு.க., தொண்டர்களும் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொன்முடி கைது செய்யப்பட்டார். தற்போது பொன்முடி விழுப்புரத்தையடுத்த கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...