மூன்றாம் கண்.,: போலி என்கவுண்ட்டர்: உத்தரபிரதேசம் முதலிடம்

Pages

Sunday, August 7, 2011

போலி என்கவுண்ட்டர்: உத்தரபிரதேசம் முதலிடம்




குற்றவாளிகளை போலியாக என்கவுண்ட்டர் நடத்தி சுட்டுக் கொன்றதில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்து உள்ளது.


கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 120 பேர் அங்கு போலி என்கவுண்ட்டர் மூலம் கொல்லப்பட்டதாக தங்களுக்கு புகார்கள் வந்துள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்து உள்ளது. 2 வது இடத்தை மணிப்பூர் மாநிலம் பெறுகிறது. அங்கு கடந்த 3 ஆண்டுகளில் 60 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் கொல்லப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 369 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் கொல்லப்பட்டதாக புகார்கள் வந்ததாகவும், அவற்றில் 98 புகார்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டு விட்டதாகவும், மீதி 271 புகார்கள் பற்றி பரிசீலித்து வருவதாகவும், இவற்றில் 90 புகார்களில் போலீசாரின் நடவடிக்கை சந்தேகம் அளிப்பதாக உள்ளதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. போலி என்கவுண்ட்டரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4 கோடியே 54 லட்சம் இழப்பீடாக வழங்க பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்து உள்ளது

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...