மூன்றாம் கண்.,: ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

Pages

Friday, August 26, 2011

ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு


‘‘ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது’’என மக்களவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசினார்.
அவருடைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்படி அன்னா ஹசாரே விதித்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றதை தொடர்ந்து, மக்களவையில் அது பற்றி விவாதிக்க நேற்று மதியத்துக்குப் பிறகு நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்கு முன்பாக, மக்களவையில் நேற்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசியதாவது: எல்லா மட்டத்திலும் ஊழல் ஊடுருவி உள்ளது. அதை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டும் உதவாது. லோக்பால் அமைப்பை தேர்தல் ஆணையத்தை போல் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட தனி அமைப்பாக உருவாக்குவது பற்றி நாம் ஏன் விவாதிக்க கூடாது? ஏனெனில், நல்ல நோக்கமாக இருந்தாலும் கூட, தனி நபரின் உத்தரவை ஏற்பது ஜனநாயக அமைப்புகளை பலவீனமாக்கி விடும். இன்று, லோக்பால் மசோதாவை ஏற்கும்படி கூறுவதை ஏற்றால், நாளை வேறு மாதிரியான பிரச்னையை கொண்டு வருவார்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.

இந்த பிரச்னை பற்றி கேள்வி நேரத்துக்கு பிறகு ராகுல் காந்தி பேசியதற்கு தே.ஜ. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் மீரா குமார், ‘‘கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசும்படி ராகுல் காந்திக்கு நான்தான் அனுமதி கொடுத்தேன்’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு விளக்கினார். ராகுலின் பேச்சை அவருடைய சகோதரி பிரியங்கா, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். போதனை தேவையில்லைராகுலின் பேச்சு குறித்து பா.ஜ. மூத்த தலைவர் அனந்த் குமார் அளித்த பேட்டியில், ‘‘ராகுலின் போதனை நமக்கு தேவையில்லை. அதைவிட்டு விட்டு லோக்பால் மசோதாவில் மாற்றம் செய்யும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ராகுல் வலியுறுத்த வேண்டும்’’ என்று விமர்சித்தார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...