மூன்றாம் கண்.,: சமச்சீர் கல்வி: விஜயகாந்த் சந்தேகம்

Pages

Friday, August 12, 2011

சமச்சீர் கல்வி: விஜயகாந்த் சந்தேகம்


சமச்சீர் கல்வி குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அது உண்மையில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி உருவாக வழிவகுக்குமா என சந்தேகம் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புறங்களில் அதிக வசதிகள் கொண்ட பள்ளிகளில் படித்த பிள்ளைகள் கூறும்போது, எங்களுக்கு 4-ம் வகுப்பில் சொல்லிக் கொடுத்ததுதான் இன்று 8-ம் வகுப்பில் உள்ளது. அதில் என்ன புதிதாக படிக்கப் போகிறோம் என்றனர்.ஆனால் அதே நேரத்தில் எந்த வசதியும் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு புத்தகம் படிப்பதற்கு கடினமாக உள்ளது. பொதுப்பாடத்திட்டத்தின்படி தேர்வு நடத்தினால் நகர்ப்புற பணக்காரப் பிள்ளைகள் எளிதாக அதிக மார்க்குகள் வாங்கி மேல்படிப்புக்குச் செல்ல முடியும். கிராமப்புறத்தினருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. இது எந்த வகையில் சமூக நீதியாக அமையும்? தற்போதுள்ள பாடத்திட்டத்தை எல்லோரையும் படிக்கச் செய்தால் அதன் மூலம் கிளார்க்குகளை வேண்டுமானால் உருவாக்கலாம். அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது.உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டுவர முதலில் அடிப்படை வசதிகளை கல்விக் கூடங்களில் செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். வண்டிக்கு முன்புதான் குதிரையை மாட்ட வேண்டுமே தவிர, குதிரைக்குப் பின்னால் வண்டி இழுத்துக் கொண்டு ஓடுவது சரியாக வராது. தற்போதைய பொதுப் பாடத்திட்டமும் முன்னுக்குப் பின் முரணானது என்றே கருதுகிறேன். இவ்வாறு சட்டப்பேரவையில் விஜயகாந்த் பேசினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...