மூன்றாம் கண்.,: இந்திய அணி மீண்டெழும்: வாசிம் அக்ரம்

Pages

Wednesday, August 3, 2011

இந்திய அணி மீண்டெழும்: வாசிம் அக்ரம்


இரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடியதற்காக தோனியைக் குறைகூற முடியாது. இந்திய அணி தோல்வியில் இருந்து மீண்டெழும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியது: தோனி இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளில் அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். தோனி அவருடைய விக்கெட் கீப்பர் பணியில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டு போட்டிகளில் தோற்றதற்காக, அவர் சோடை போய்விட்டார் என்று கூற முடியாது. இந்தத் தோல்வியை அவர் எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி உள்ளிட்ட பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் அக்ரம் அதை முற்றிலும் மறுத்துள்ளார். முதல் நாளில் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஏராளமான புற்கள் வளர்ந்திருந்தன. அதனால் அவர் பீல்டிங்கைத் தேர்வு செய்தது சரியான முடிவே என்று நம்புகிறேன். பல்வேறு தரப்பினர் அவர்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு பௌலரான என்னைப் பொறுத்தவரையில் முதலில் பந்து வீசியது சரியான முடிவே என்றார்.

சேவாக்கின் வருகை குறித்துப் பேசிய அக்ரம், அவரின் வருகையால் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அவரது வருகை இந்திய பேட்டிங்குக்கு பலம் சேர்க்கும். அவர் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன். அதனால் இந்தியா தோல்வியில் இருந்து மீண்டெழும். சேவாக், கம்பீர் ஆகியோர் இந்திய அணியின் வியக்கத்தக்க தொடக்க ஜோடி. எனவே அவர்கள் இந்திய அணி மீண்டு வர உதவுவார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

ஜாகீர்கான் குறித்துப் பேசிய அக்ரம், அவர் விளையாடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நார்த்தம்ப்டன்ஸயர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதன் மூலம் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகிவிடுவார் என கருதுகிறேன் என்றார்.

Share/Bookmark

1 comment:

  1. உங்கள் செய்தியில் கொஞ்சம் பொய்யும் கலந்துள்ளது. அதாவது வாசிம் அகரம் தோணி குறித்து சொன்னது எல்லாம் உண்மைதான், ஆனால் அவர் சேவாக் மற்று காம்பிர் பற்றி கூறவே இல்லை...........தயவு செய்து படித்ததை மட்டும் எழுதுங்கள்...................அதுதான் தர்மம். மேலும் என்னை பற்றி அறிய என்னுடைய வலைப்பூவை பார்வையிடுங்கள்

    flypno.blogspot.com

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...