மூன்றாம் கண்.,: தலைவ‌ர்க‌ள் ரம்ஜான் வாழ்த்துக்கள்

Pages

Tuesday, August 30, 2011

தலைவ‌ர்க‌ள் ரம்ஜான் வாழ்த்துக்கள்


உலகெங்கிலும் வன்முறைகள் ஓய்ந்து அன்பும்மகிழ்ச்சியும், சமாதானமும் தழைத்தோங்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் எ‌ன்று தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து தெரிவித்துள்ளன‌ர்.
தமிழக ஆளுந‌ர் சுர்ஜித்சிங் பர்னாலா: ஈத் திருநாளை முன்னிட்டு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். திருக்குரான் போதனைகளை பின்பற்றி அன்பு சகோதரத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும். மத நல்லிணக்கம் மற்றும் அமைதி தழைக்க வேண்டும்.

மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன்: ரமலான் புனித மாதத்தில் நோன்பை கடைபிடித்து மனித நேயத்துடன் ஏழை, எளியோருக்கு உதவுவது கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகரானது என்று ரம்ஜான் என்னும் ஈகைத்திருநாளினை உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள் இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். அனைவருக்கும் எனது மனங்கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள்.

த‌மி‌ழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.‌வி.தங்கபாலு : மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழ்ந்து, நாட்டில் மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.

பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் : இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவவேண்டும் என்கிறது இஸ்லாமியம். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பலர் வறுமையில் வாடும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற சச்சார் குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்தும்படி மத்திய அரசை வலியுறுத்த இந்த நாளில் உறுதியேற்போம்.

தே.மு.‌‌‌‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் : இல்லாதவர்கள் அனுபவிக்கும் இன்னலை அனைவரும் உணரச் செய்வதற்கே நபிகள் நாயகம் நோன்பு இருப்பதை முக்கிய கடமையாக இஸ்லாமியர்களுக்கு எடுத்துரைத்தார். ஒரு வகையில் தே.மு.தி.க.வின் கொள்கையும், இஸ்லாம் மார்க்கம் எடுத்துச் சொல்லும் கடமைகளும் ஒன்றிணைந்து இருப்பது பெருமைக்குரியது. அந்த வகையில் இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் ரமலான் நோன்பு முடிக்கும் இந்த நன்னாளில் ஏழை, எளிய மக்களுக்கு எல்லா நலன்களும் கிடைத்திட அருள் செய்ய வே‌ண்டு‌ம்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ : இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள். இந்த இனிய நன்னாளில், சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் : உலகெங்கிலும் வன்முறைகள் ஓய்ந்து அன்பும், மகிழ்ச்சியும், சமாதானமும் தழைத்தோங்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் : அன்பு, கருணை, இரக்கம், பிறர் பசி தீர்த்தல், உடல் வருத்தும் நோன்பு இருந்து இறை வழிபாடு செய்தல் ஆகிய மார்க்கங்களை முன்னிருத்தி ரம்ஜான் திருநாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜானுக்கு மறுநாள் இந்துக்களின் பண்டிகையாகிய விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த இனிய தருணத்தில் இஸ்லாம், இந்து, கிறித்துவம் என்கிற மதரீதியான உணர்வுகளை தாண்டி இந்தியாவில் வசிக்கும் யாவரும் இந்தியரே என்கிற தேசிய உணர்வோடு இந்நன்னாளை கொண்டாடடி மகிழ்வோம்.

இலட்சிய தி.மு.க நிறுவனர் தலைவர் டி.ராஜேந்தர்: எல்லாம் வல்ல இறைவன் அல்லாவின் அருள் பொங்கட்டும். அவரருளினால் அறியாமை இருள் இவ்வுலகில் நீங்கட்டும். இன்ஷா அல்லா. இவ்வுல மக்கள் இருக்க வேண்டும் நல்லா. என்னருமை இஸ்லாமிய சமுதாயத்து மக்களுக்கு என் இனிய இலட்சியமுள்ள ரம்ஜான் வாழ்த்துக்கள்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன்: இஸ்லாத்தை தந்த நபி நாதராம் அண்ணல் நபிகள் நெறிப்படி வாழும் அனைத்து இஸ்லாமியர் சகோதரர்களுக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்கள் .

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...