மூன்றாம் கண்.,: தமிழ் புத்தாண்டு மாற்றம் : கருணாநிதி கண்டனம்

Pages

Tuesday, August 23, 2011

தமிழ் புத்தாண்டு மாற்றம் : கருணாநிதி கண்டனம்


தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றி சட்டம் கொண்டு வந்ததற்கு, கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள, "கேள்வி-பதில்' அறிக்கை:


தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வகையில் அ.தி.மு.க., அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே?
மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு, ஐநூறு புலவர் பெருமக்கள் கூடி, அவர்கள் ஆழமாக விவாதித்து, ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்று தான், திருவள்ளுவர் ஆண்டு என்பதும், ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில் தான் என்றும் முடிவு செய்தனர். அந்த ஐநூறு புலவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின்படி, தி.மு.க., ஆட்சியில், தை முதல் நாளை தமிழாண்டு தொடக்க நாள் என்றும், அதையொட்டித் தான், திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்து கொண்டாடி வருகிறோம். தி.மு.க., அரசின் சட்டத்தை ரத்து செய்து, அ.தி.மு.க., அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த போது, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதை எதிர்த்துள்ளனரே?
அவர்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...