மூன்றாம் கண்.,: 25 மில்லியன் டொலருக்காக ஒசாமாவின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்த ஐ.எஸ்.ஐ அதிகாரி

Pages

Wednesday, August 10, 2011

25 மில்லியன் டொலருக்காக ஒசாமாவின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்த ஐ.எஸ்.ஐ அதிகாரி


கடந்த மே மாதம் அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்கவின் நேவி சீல் படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.


அப்பொழுது பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவு பிரிவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆகியோருக்கு தெரியாமல் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது. தற்போது ஆர்.ஜே. ஹில்ஹவுஸ் என்ற பெண்மணி "தி ஸ்பை ஹூ பில்டு மீ" என்ற தனது பிளாக்கில், பாகிஸ்தான் உளவு பிரிவை சேர்ந்த ஒருவர் 25 மில்லியன் டொலர் வெகுமானத்திற்கு ஆசைப்பட்டு பின்லேடனை அமெரிக்க படையினருக்கு காட்டி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அந்த அதிகாரி தன்னுடைய குடும்பத்திற்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும்படி அமெரிக்க படையினரிடம் கேட்டு கொண்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்

Share/Bookmark

1 comment:

  1. அமைதிசாந்தம்August 10, 2011 at 4:21 PM

    பாகிஸ்தான் உளவு பிரிவை சேர்ந்தவர் வெகுமானத்திற்கு ஆசைப்பட்டாலும் அவரால் மிக நல்ல காரியம் நிறைவேறியுள்ளது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...