மூன்றாம் கண்.,: செப். 2 முதல் அரசு கேபிள் டிவி

Pages

Tuesday, August 30, 2011

செப். 2 முதல் அரசு கேபிள் டிவி


பேரவையில் நேற்று விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை தாக்கல் செய்து கூறியதாவது: அதிமுகவின் தேர்தல் அறிக்கையில்,
குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்பு கொடுக்கும் வகையிலும், நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது. இந்நிறுவனத்திற்கு ஒரு முழு நேர தலைவர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான ஒரு நிர்வாக இயக்குனர் நியமிக்கப்பட்டனர். தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டன.
மீதமுள்ள 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்படும். புதிதாக அனலாக் தொழில்நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டு, அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்குவதற்காக உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்தனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன. 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பின் மூலம் கட்டணச் சேனல்கள் உள்பட 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். விரைவில் கட்டண சேனல்களும் வழங்கப்படும். ஒளிபரப்பு சேவைகள் 2.9.2011 முதல் தொடங்கப்பட்டு, குறைந்த செலவில் வழங்கப்படு¢ம். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையை பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக ஸீ70 மட்டுமே ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும். இந்த ஒளிபரப்பை வழங்கும் ஆபரேட்டர்களிடமிருந்து கட்டணமாக ஒரு இணைப்பிற்கு ரூ.20 வசூலிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...