மூன்றாம் கண்.,: தமிழர்களின் ’கலர்’ குறித்த கமெண்ட்: அமெரிக்க தூதர் வருத்தம்

Pages

Saturday, August 13, 2011

தமிழர்களின் ’கலர்’ குறித்த கமெண்ட்: அமெரிக்க தூதர் வருத்தம்




சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தில் நேற்று தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு தூதர் வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.
சென்னையில் அமெரிக்க தூதர் மௌரீன் சா, என்னுடைய தோல் தமிழர்களைப் போல கறுப்பு வண்ணத்துக்கும், அழுக்காகவும் மாறி வருகிறது என்று தெரிவித்திருந்தார். இவரின் இன ரீதியான இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு அமெரிக்க தூதரகம் இன்று வருத்தம் தெரிவித்துள்ளது. மௌரீன் சாவோவின் பொருத்தமற்ற இந்தக் கருத்து துரதிருஷ்டவசமானது. அவரது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியது அமெரிக்க தூதரகம். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பாக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில்தான் மௌரீன் சாவ் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். நான் டெல்லியில் இருந்து ஒரிஸ்ஸாவுக்கு 24 மணி நேர ரயில் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால், அடுத்து 72 மணி நேரமாகியும் அந்த ரயில் வண்டி குறிப்பிட்ட நகருக்கு சென்று சேரவில்லை. என்னுடைய தோல் அழுக்காகவும் கறுப்பாகவும் ஆகிவிட்டது... தமிழர்களின் தோலைப் போல! என்று சொன்னவர், தான் இருபது வருடங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவியாக இருந்த போது மேற்கொண்ட பயண நிகழ்வு தன் நினைவுக்கு வந்ததாகக் கூறினார். ஆனால், இவரது இந்தக் கருத்து சர்ச்சையாவது போல் தெரிந்ததும், அமெரிக்கத் தூதரகம், அவர் வேண்டுமென்றோ உள்நோக்கத்துடனோ இவ்வாறு பேசவில்லை என்றும், இவ்வாறு ஒரு வார்த்தை வெளிவந்ததற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் ச்சாவோ கூறினார் என்றும் தெரிவித்துள்ளது. அண்மையில் இந்தியப் பயணம் மேற்கொண்ட அமெரிக்கச் செயலர் ஹிலாரி கிளிண்டன், இந்திய அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்காக, மாணவர் பரிமாற்றத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி, இங்குள்ள மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக அமெரிக்க செல்வதற்கும், அங்குள்ளவர்கள் இங்கு வரவும் வழி ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகமும், இந்தியவிலுள்ள அமெரிக்க மிஷனும் சேர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...