மூன்றாம் கண்.,: ரவுடி தலை துண்டித்து கொலைஓடஓடவிரட்டி பழிதீர்த்த கும்பல்

Pages

Sunday, August 28, 2011

ரவுடி தலை துண்டித்து கொலைஓடஓடவிரட்டி பழிதீர்த்த கும்பல்


நெல்லையில் "பழிக்குப்பழி'யாக ரவுடியை கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை அருகே மேல குன்னத்தூரை சேர்ந்தவர் திருமலை(35). இவர் நேற்று காலை நெல்லை டவுன் கல்லணை பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார்  சைக்கிள்களில் வந்தவர்கள் திருமலையை வழிமறித்தனர். உடனே திருமலை மோட்டார் சைக்கிளை அங்கு போட்டுவிட்டு தெருவில்ஓடினார். மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் திருமலையை விரட்டிச்சென்று அரிவாளால் வெட்டினர். திருமலை கழுத்தை குறிவைத்து கொலையாளிகள் வெட்டினர். தலை துண்டாகி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் திருமலை இறந்தார். கொலையாளிகள் தப்பியோடினர். இச்சம்பவம் நெல்லை டவுனில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் ஏராளமானோர் திரண்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ, துணை கமிஷனர் ஜெயபாலன், உதவி கமிஷனர் ஸ்டாலின் விசாரணை நடத்தினர். தடய அறிவியல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் மோப்பநாய் மூலம் விசாரணை நடந்தது. நாய் சிறிதுதூரம் ஓடியது.இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா தலைமையில் தனிப்படை போலீசார் தப்பிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், "பழிக்குப்பழி'யாக திருமலை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.குண்டர் சட்டத்தில்கைது செய்யப்பட்டவர் கொலை செய்யப்பட்ட திருமலை மீது கோட்டியப்பன் கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. 2009ம்ஆண்டு சுத்தமல்லி அருகே மேல குன்னத்தூரில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தேர்தலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கூட்டுறவு பாங்க் கேஷியர் பால்சாமி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மூன்றாம் நபராக திருமலை உள்ளார். இந்த வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருமலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இரு மாதங்களுக்கு முன் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். பால்சாமி கொலைக்கு பழிவாங்கும் வகையில் திருமலை கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனிப்படை   தீவிரம்சம்பவத்தில் மூவருக்கு முக்கிய தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சிலர் கொலைக்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க டவுன், குன்னத்தூர், சுத்தமல்லி பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட திருமலைக்கு மனைவி, 3 வயது மகன் உள்ளனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...